/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலை விபத்து * 3 பேர் மீது வழக்கு: 2 பேர் கைது

ADDED : ஆக 16, 2024 03:51 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மாயத்தேவன்பட்டியில் ஜெயந்தி பயர் ஒர்க்சில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு வேலை பார்த்த புள்ள குட்டி, 53, கார்த்தீஸ்வரன், 35, சம்பவ இடத்தில் பலியாகினர். போஸ், மணிகண்டன் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஆலை உரிமையாளர் ஜெயராஜ்,73, குத்தகைதாரர் கண்ணன்,50, போர்மேன் பாலமுருகன்,39, ஆகிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதில் உரிமையாளர் ஜெயராஜ் உடல்நலம் இன்றி சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குத்தகைதாரர் கண்ணன்,
போர்மேன் பாலமுருகன் ஆகியோரை நேற்று மல்லி போலீசார் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகர் சிறையில் அடைத்தனர்.