/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்தூர் ரத வீதிகளில் வலுவாக சீரமைக்கபடாத ரோடுகள்: தேரின் அழுத்தம் தாங்குமா இரும்பு பிளேட்டுகள்

ADDED : ஆக 06, 2024 04:38 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் தேரோடும் தெற்கு, மேல ரத வீதிகளில் மின் வாரியம் தோண்டிய பள்ளங்கள் இன்னும் முழு அளவில் சமப்படுத்தாமல் உள்ளது. இதில் மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்தி தேரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆண்டாள் தேருக்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிறகு எந்த வித தடையும் இல்லாமல் செல்வதற்காக நான்கு ரத வீதிகளிலும் 3 அடி ஆழத்திற்கு வலுவான தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு , மேல ரத வீதிகளில் மின்சார வயர்களை தரைவழி பாதைகளாக மாற்றுவதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டது. இந்தப் பள்ளங்கள் மீண்டும் வலுவாக செப்பனிடப்படவில்லை. பெயரளவில் சமப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் மேலரத வீதியில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மண் ரோடாகவே உள்ளது. தற்போது தற்காலிக தீர்வாக ரத வீதிகளில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பிளேட்டுகள் தேர் சக்கரத்தின் அழுத்தத்தை தாங்குமா என்பது சந்தேகத்திற்குரியது.
கடந்தாண்டு மேலரத வீதியில் ரோடு வலுவாக இருந்த நிலையிலும், தேர் சக்கரத்தின் அழுத்தத்தில் ரோடு சேதமடைந்தது.
எனவே, தற்போது தேரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.