/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுரங்கப்பாதை பணிகளை விரைவில் தொடங்குங்க
/
சுரங்கப்பாதை பணிகளை விரைவில் தொடங்குங்க
ADDED : மே 19, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்று வரும் அம்ருத் திட்ட மேம்பாட்டு பணிகளை ஆய்விற்கு வந்த கோட்ட மேலாள சரத் ஸ்ரீவத்சவ் வந்தார். அவரிடம் ரயில்வே சுரங்கப் பாதை பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும், பயணச்சீட்டு அறை முன் பகுதியை சுலபமாக அடையும் வகையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
நடைமேடையின் விடுபட்ட இடங்களில் கூரை அமைக்க வேண்டும். அம்ருத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரயில் பயனாளர் சங்க தலைவர் சுகந்தம் ராமகிருஷ்ணன் தலைமையில் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

