/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் மாநில பேட்மிண்டன் போட்டி
/
சிவகாசியில் மாநில பேட்மிண்டன் போட்டி
ADDED : ஜூலை 21, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி துவங்கியது.
தமிழ்நாடு பேட்மிண்டன் அசோசியேசன் அங்கீகாரத்தோடு மாவட்ட ஷட்டில் அசோசியேசன் சார்பில் 19 வயதிற்குட்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கான ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் தரவரிசை போட்டி சிவகாசி அன்சோ ஸ்போர்ட்ஸ் அகாடமியில் துவங்கியது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து மதுரை, சென்னை, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 350 வீரர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஐந்து நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி ஜூலை 24ல் நடைபெறும்.