நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி மேலக்கள்ளங்குளத்தைச் சேர்ந்த அய்யம்பாண்டி 33.
ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். வயலில் வெள்ளரி பயிரிட்டுள்ளார். 2 பசுமாடுகள், கிடரி மாட்டை வயலில் கட்டிப்போட்டு, வெள்ளரிக்காய் பறித்து, மதுரை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது கட்டிப்போட்டிருந்த மாடுகளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

