ADDED : ஆக 28, 2024 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி ; சிவகாசி தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குடிமனை பட்டா கேட்டு போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் சண்முகலட்சுமி, சங்கரேஸ்வரி, அன்னலுார்து தலைமை வகித்தனர்.
அன்ன தாய், ரகுனாதேவி, பொன்னுத்தாய் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் பேசினர்.
தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாரிடம் குடிமனை பட்டா கேட்டு மனு கொடுக்கப்பட்டது.

