/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, பஸ் வசதி கேட்டு மாணவர்கள் மறியல்
/
ரோடு, பஸ் வசதி கேட்டு மாணவர்கள் மறியல்
ADDED : ஆக 14, 2024 12:39 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ரோடு, பஸ் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் ரோடு மறியல் செய்தனர்.
அருப்புக்கோட்டை செட்டிகுறிச்சி அருகே அரசு கலைக்கல்லூரி உள்ளது. பந்தல்குடி மெயின் ரோட்டில் இருந்து கல்லூரி ஒரு கி.மீ., தூரம் உள்ளது. இதற்கு முறையான ரோடு வசதி இல்லை. மழைக்காலத்தில் சேரும் சகதியமாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் அருப்புக்கோட்டையில் இருந்து செட்டிக்குறிச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் கல்லூரி ஸ்டாப்பில் நிற்பது இல்லை. இதனால் மாணவர்கள் பஸ்ஸில் ஏற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நேற்று காலை ரோடு போடவும், பஸ் வசதி செய்ய கோரியும், பந்தல்குடி மெயின் ரோட்டில் மாணவர்கள் மறியல் செய்தனர். டி.எஸ்.பி., காயத்ரி, இன்ஸ்பெக்டர்கள் முத்துலட்சுமி, செல்லப்பாண்டி மாணவர்களிடம் பேசி, 3 நாட்களில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.