/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரு வழிச் சாலையை 4 வழி சாலையாக மாற்ற ஆய்வு
/
இரு வழிச் சாலையை 4 வழி சாலையாக மாற்ற ஆய்வு
ADDED : ஆக 07, 2024 07:36 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை அருகே இரு வழி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அருப்புக்கோட்டையில் இருந்து வாலிநோக்கம் செல்லும் மாநில நெடுஞ்சாலை முதற்கட்டமாக முதல் அமைச்சரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், கமுதி விலக்கு முதல் பரளச்சி பஸ் ஸ்டாப் வரை உள்ள 6 கி.மீ., இரு வழி சாலை, நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணிகளுக்கான மதிப்பீடு தயாரிக்கும் பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகிறது.
சாலையின் தரத்தை ஆய்வு செய்யும் பணி அருப்புக்கோட்டை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் முத்துசாமி, உதவி பொறியாளர் தினேஷ் குமார், இளநிலை பொறியாளர் செந்தில்குமார் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.