ADDED : ஜூலை 15, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பெறும் சர்வதேச அல்லது என்.ஏ.பி.சி.பி., ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் மூலம் பெறப்படும் தர சான்று பெற தரச்சான்று மானிய திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்களுக்கான ஐ.எஸ்.ஓ., 9000, 14001, 22000, எச்.ஏ.சி.சி.பி., ஜி.எச்.பி., பி.ஐ.எஸ்., செட், ஓகோ டெக்ஸ் போன் தரச்சான்றுகள், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற சர்வதேச தரச்சான்றுகள் பெற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள் மானியத்தில் விண்ணப்பிக்கலாம்.
சான்று பெற செலவழித்த கட்டணத்தொகையில் நுாறு சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை) அரசினால் மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும், என்றார்.