ADDED : ஜூன் 11, 2024 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் ரோசல்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு செல்லும் ரோடு மோசமான நிலையில் இருப்பதால் பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
ரோசல்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளி ரோடு குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. ரோடு சேதத்தால் மாணவர்கள், மக்கள் தவிக்கின்றனர். மேலும் இந்த தெருவில் குப்பையும் ஆங்காங்கே சுகாதாரக்கேடு உள்ளது. இதனால் துார்நாற்றமும் உள்ளது.
புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் குணம் கூறியதாவது: மாணவர்கள் வந்து செல்லும் ரோட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும், என்றார்.