ADDED : அக் 01, 2024 11:48 PM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ஆறு மாதங்களாக நடைபெறும் நிழற்குடை பணிகளால் பயணிகள் விரக்தியடைந்துள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சி நடுவே செல்லும் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மகப்பேறு மருத்துவமனை, பி.எஸ்.கே பார்க் இரண்டு இடங்களிலும் பயணிகளுக்கான நிழற் குடை பணிகள் நடந்து வருகிறது.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளுக்காக இடிக்கப்பட்டதுடன் பயணிகளுக்காக தற்காலிக நிழற்குடை பணிகள் நடைபெறவில்லை. நீண்ட காலத்திற்கு பின் தொடங்கி கடந்த ஆறு மாதங்களாக ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் தினமும் பயணிகள் பாதி பணிகள் முடிந்த நிழற் குடைக்கு கீழே ஒதுங்க அச்சப்பட்டு மழை, வெயிலில் காய்ந்து வருகின்றனர்.
இது குறித்து கணேசன்: பி.எஸ்.கே பார்க் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் டாஸ்மாக் கடைகளால் குடிமகன்கள் பாதியில் உள்ள நிழல் குடையை தங்குமிடமாக மாற்றி உள்ளனர். இதனால் பயணிகள் ஒதுங்க வழியின்றி ரோட்டில் ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகள் விரைந்து முடித்து நடவடிக்கைக்கு எடுத்து வர வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.