sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சூப்பர் ரிப்போர்டர் விசிட்

/

சூப்பர் ரிப்போர்டர் விசிட்

சூப்பர் ரிப்போர்டர் விசிட்

சூப்பர் ரிப்போர்டர் விசிட்

ADDED : ஜூன் 15, 2024 06:57 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 06:57 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீரில் கலக்கும் கழிவுநீர், குண்டும் குழியுமான ரோடு

*சாத்துார் 3வது வார்டில் மக்கள் அவதி

சாத்துார், ஜூன் 15-

சாத்துார் நகராட்சி 3வது வார்டில் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் ,குண்டு குழியுமான ரோட்டினால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சங்கரேஸ்வரி காம்பவுண்ட், வெம்பக்கோட்டை ரோடு, வெம்பக்கோட்டை ரோடு வடக்கு குறுக்குச் சந்து, நம்மாழ்வார் காம்பவுண்டு மதுரை பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகள் உள்ளடக்கியது 3வது வார்டு.

வார்டு பகுதியில் முறையான ரோடு, வாறுகால் வசதியில்லை. வெம்பக்கோட்டை ரோடு குறுக்குசந்திலும், நம்மாழ்வார் காம்பவுண்ட் பகுதியிலும் வாறு காலில் சாக்கடை செல்லவில்லை.

நம்மாழ்வார் காம்பவுண்ட், மெயின் வாறு காலில் இருந்து சிறிய வாறுகாலுக்கு கழிவுநீர் புகுந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.

கழிவுநீர் செல்வதற்கு முறையான பாதை இல்லாததால் வாறுகால் கட்டப்பட்டும் இந்தப் பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.

சிலர் வீடுகளில் செப்டிக் டேங்க் கட்டாமல் நேரடியாக மனிதக்கழிவை சாக்கடையில் கலக்க விட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

மதுரை பஸ் ஸ்டாப் அருகில் செயல்பட்டு வந்த பொது சுகாதார வளாகம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதை செயல்பாட்டில் கொண்டுவர இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

வீட்டிற்குள் வரும் கழிவுநீர்

வெம்பக்கோட்டை ரோடு வடக்கு குறுக்குத்தெரு, நம்மாழ்வார் காம்பவுண்ட்டில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. மெயின் வாறுகாலில் குப்பை, மண் குவிந்து இருப்பதால் கழிவுநீர் செல்லாமல் வீட்டிற்குள் திரும்பி வருகிறது. அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறோம்

இசக்கிமுத்து, குடும்பத் தலைவர்

குடிநீரில் கழிவுநீர்

4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. இந்த குடிநீரும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. பல முறை நகராட்சியில் புகார் செய்தும் குடிநீரில் கலந்து வரும் கழிவுநீரை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

சீனா, குடும்பத் தலைவி.

சாக்கடையில் குப்பை

வாறுகாலை சுத்தம் செய்ய வரும் ஆட்கள் குப்பை அகற்றிவிட்டு ரோடு ஓரத்தில் வைக்கின்றனர். இது மீண்டும் சாக்கடைக்குள் விழுந்து சாக்கடை முழுவதும் குப்பை மிதக்கிறது. கழிவு நீர் செல்லவில்லை.

சர்மிளா,குடும்பத் தலைவி.

ரோடு வசதி தேவை

ரோடு முழுவதும் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக உள்ளது. சிறிய மழை பெய்தாலும் சாக்கடை யும், மழை நீரும் தெருவில் முழங்கால் அளவுக்கு தேங்குவதுடன் பாத்ரூம் வழியாக வீட்டிற்குள் வந்து விடுகிறது. மற்ற தெருக்களில் எல்லாம் பேவர் ப்ளாக் ரோடு போட்டது போல் 3வது வார்டிலும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்பையா, குடும்பத் தலைவர் .

சாத்துார், ஜூன் 15--

சாத்துார் நகராட்சி 3வது வார்டில் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் ,குண்டு குழியுமான ரோட்டினால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சங்கரேஸ்வரி காம்பவுண்ட், வெம்பக்கோட்டை ரோடு, வெம்பக்கோட்டை ரோடு வடக்கு குறுக்குச் சந்து, நம்மாழ்வார் காம்பவுண்டு மதுரை பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகள் உள்ளடக்கியது 3வது வார்டு.

வார்டு பகுதியில் முறையான ரோடு, வாறுகால் வசதியில்லை. வெம்பக்கோட்டை ரோடு குறுக்குசந்திலும், நம்மாழ்வார் காம்பவுண்ட் பகுதியிலும் வாறு காலில் சாக்கடை செல்லவில்லை.

நம்மாழ்வார் காம்பவுண்ட், மெயின் வாறு காலில் இருந்து சிறிய வாறுகாலுக்கு கழிவுநீர் புகுந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.

கழிவுநீர் செல்வதற்கு முறையான பாதை இல்லாததால் வாறுகால் கட்டப்பட்டும் இந்தப் பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.

சிலர் வீடுகளில் செப்டிக் டேங்க் கட்டாமல் நேரடியாக மனிதக்கழிவை சாக்கடையில் கலக்க விட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

மதுரை பஸ் ஸ்டாப் அருகில் செயல்பட்டு வந்த பொது சுகாதார வளாகம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதை செயல்பாட்டில் கொண்டுவர இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

வீட்டிற்குள் வரும் கழிவுநீர்

இசக்கிமுத்து, குடும்பத் தலைவர்: வெம்பக்கோட்டை ரோடு வடக்கு குறுக்குத்தெரு, நம்மாழ்வார் காம்பவுண்ட்டில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது.

மெயின் வாறுகாலில் குப்பை, மண் குவிந்து இருப்பதால் கழிவுநீர் செல்லாமல் வீட்டிற்குள் திரும்பி வருகிறது. அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறோம்

குடிநீரில் கழிவுநீர்

சீனா, குடும்பத் தலைவி: 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. இந்த குடிநீரும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. பல முறை நகராட்சியில் புகார் செய்தும் குடிநீரில் கலந்து வரும் கழிவுநீரை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

சாக்கடையில் குப்பை

சர்மிளா, குடும்பத் தலைவி: வாறுகாலை சுத்தம் செய்ய வரும் ஆட்கள் குப்பை அகற்றிவிட்டு ரோடு ஓரத்தில் வைக்கின்றனர். இது மீண்டும் சாக்கடைக்குள் விழுந்து சாக்கடை முழுவதும் குப்பை மிதக்கிறது. கழிவு நீர் செல்லவில்லை.

ரோடு வ சதி தேவை

சுப்பையா, குடும்பத் தலைவர்: ரோடு முழுவதும் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக உள்ளது. சிறிய மழை பெய்தாலும் சாக்கடை யும், மழை நீரும் தெருவில் முழங்கால் அளவுக்கு தேங்குவதுடன் பாத்ரூம் வழியாக வீட்டிற்குள் வந்து விடுகிறது.

மற்ற தெருக்களில் எல்லாம் பேவர் ப்ளாக் ரோடு போட்டது போல் 3வது வார்டிலும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      Dinamalar
      Follow us