நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மா.பா., பாண்டியராஜன், கட்சி நிர்வாகிகளுடன் விஸ்வநாததாஸ் காலனியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதன் பின்பு உயிர்ப்பு இல்லத்தில் 3 ஆண்டுகள் சேவை நிறைவு செய்த சாரண, சாரணியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
மேலும் சரஸ்வதி அம்மா லைன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அன்பாலயம் திட்டத்தின் கீழ் விதவை பெண்களுக்கு புதிய தொழில் துவங்க உபகரணங்களை வழங்கினார்.