ADDED : ஜூலை 25, 2024 03:45 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரோடு, பாலங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் செய்யப்பட்டு வரும் மறு சீரமைப்பு பணிகளை சிறப்பு திட்ட செயலாக்க துறையால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஆய்வு செய்தார்.
சாத்துார், விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய உட்கோட்டங்களில் பாதிப்புக்குள்ளான அண்ணாநகர், கரிசல்பட்டி ரோடு, கன்னிசேரி - மத்தியசேனை ரோடு, சங்கரலிங்கபுரம் - ஒண்டிப்புலி ரோடு, கொங்கன்குளம் - திருவேங்கிடபுரம் ரோடு, சமுசிகாபுரம் வடகரை ரோடு ஆகிய ரோடுகளில் நடந்து வரும் ரோடு, தடுப்பு சுவர், பால பணிகளை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரி செபஸ்டின் பிரிட்டோ ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.54.30 கோடிக்கு நடந்து வரும் இந்த மறுசீரமைப்பு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி உடனிருந்தார்.