/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தமிழக பட்ஜெட் உரை எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பு
/
தமிழக பட்ஜெட் உரை எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பு
ADDED : மார் 09, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மார்ச் 14ல் துவங்குகிறது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை நேரடியாக பார்க்கும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் எல்.இ.டி., திரை அமைத்து ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதற்காக மாநகராட்சி பகுதிகளில் தலா இரண்டு இடம், நகராட்சி பகுதியில் தலா ஒரு இடத்தில் திரை அமைக்கப்பட்டு மக்கள் பார்க்க ஏதுவாக நிழற்பந்தல், குடிநீர் வசதி செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.