/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தமிழகத்தின் அரசியல் கொலைகளால் சட்டம், ஒழுங்கில் சீர்கேடு ஏற்படவில்லை எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி

ADDED : ஜூலை 07, 2024 01:44 AM
விருதுநகர்: தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கொலை செய்யப்படுவதால் சட்டம், ஓழுங்கு சீர்கேட்டு விட்டதாக கூறுவது தவறு என எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
நீட் தேர்வு தடை குறித்து தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தெரிவித்திருப்பது வரவேற்கக்கூடியது. பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பிற கட்சிகள் செய்வது எல்லாம் தவறு என பேசுகிறார். விருதுநகர் சந்திப்பில் வந்தே பாரத் சிறப்பு ரயில் நிறுத்தம் பெற்று தருவது எனது பொறுப்பு. பட்டாசு விபத்து உயிரிழப்புகளுக்கு கொடுக்கும் நிதியையும், கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்கும் நிதியையும் ஒத்து பார்க்கக்கூடாது.
மத்திய அரசு பட்டாசு தொழிலுக்கு லைசென்ஸ் கொடுப்பதால் உயிரிழப்புகளுக்கும் தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் பட்டாசு தொழிலில் ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்புகள் முன்பை விட குறைந்து உள்ளது. தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் அரசியல் கொலைகளால் சட்டம், ஓழுங்கு சீர்கேட்டு விட்டதாக கூறுவது முற்றிலும் தவறு, என்றார்.