/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் ஆசிரியர்கள் கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
விருதுநகரில் ஆசிரியர்கள் கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 14, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க மறுத்து 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வழங்கும் காப்பீடு நிறுவனங்கள் மீதும், அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் தானாக வரி பிடித்தம் செய்வதை நிறுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயவேல், கருத்திருமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வகணேசன், மாநில செயலாளர் பிரமநாயகம் பேசினார்.