ADDED : ஜூலை 24, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: டெட் தேர்வில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு விலக்களிக்கும் வகையில் லோக்சபாவில் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் சட்டத்திருத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நேற்று இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செல்வகணேசன் தலைமை வகித்தார். உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் விஜயபாலன், இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கருப்பையா, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்புச் செயலாளர் முத்தையா பேசினர்.
