/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அமர்த்துவதில் குளறுபடி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
/
ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அமர்த்துவதில் குளறுபடி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அமர்த்துவதில் குளறுபடி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அமர்த்துவதில் குளறுபடி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
ADDED : மார் 25, 2024 07:24 AM
அருப்புக்கோட்டை, : நாளை நடக்க உள்ள 10 ம் வகுப்பு பொது தேர்வில் ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதில் பலவித குளறுபடிகள் உள்ளதாக,” தேசிய ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இச்சங்க மாவட்ட தலைவர் சரவண செல்வன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
10 ம் வகுப்பு அரசு பொது தேர்வு 2024ல், அறை கண்காணிப்பாளர் பணிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது 'லாட் சிஸ்டம்' என்ற பெயரில் ஆசிரியர்கள் நியமனம் செய்வது வழக்கம்.
இதில் வேண்டிய ஆசிரியர்களை வேண்டிய பள்ளிகளுக்கும், பிடிக்காத ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் அதிக தொலைவில் உள்ள பள்ளிக்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
சில பள்ளிகளுக்கு தொடர்ந்து அந்த பள்ளிக்கு அருகே இருக்கும் ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். ஒரு பள்ளியில் தேர்வு பணி ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களின் மகனோ, மகளோ, ரத்த உறவுகளோ அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை அந்தப் பள்ளியில் தேர்வு பணியில் ஈடுபடுத்தாமல், வேறு பள்ளிக்கு பணி அமர்த்தப்பட வேண்டும் என்பது விதி. இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது இல்லை.
இவற்றைக் கண்காணிக்க கூடிய கல்வி அதிகாரிகள் எதையும் கண்டு கொள்வது இல்லை.
ஒரு ஆசிரியரை நிலையான கண்காணிப்பு குழு என்ற பணிக்கும், அதே ஆசிரியரை மேற்பார்வையாளராக வேறொரு பள்ளிக்கும் பணியில் அமர்த்தியுள்ளனர்.
எந்தப் பணிக்கு செல்வது என தெரியாமல் ஆசிரியர்கள் குழம்பி உள்ளனர், என தெரிவித்தார்.
முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி கூறியதாவது: லாட் சிஸ்டம் எனும் குலுக்கல் முறை என்பது அரசு நடைமுறை.
இது வெளிப்படையாக ஆசிரியர்கள் முன்னிலையில் செய்யப்படுகிறது. நடைமுறை சிக்கல்கள், கணினி பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன. வேறு புகார்கள் இருந்தாலும்உடனடியாகசரி செய்யப்படும், என்றார்.

