/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறப்போராட்டம் தான் செய்தோம் அதற்குள் கைது செய்து விட்டனர் ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பேட்டி
/
அறப்போராட்டம் தான் செய்தோம் அதற்குள் கைது செய்து விட்டனர் ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பேட்டி
அறப்போராட்டம் தான் செய்தோம் அதற்குள் கைது செய்து விட்டனர் ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பேட்டி
அறப்போராட்டம் தான் செய்தோம் அதற்குள் கைது செய்து விட்டனர் ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பேட்டி
ADDED : ஜூலை 31, 2024 04:33 AM
விருதுநகர், : டி.பி.ஐ., வளாகத்தில் அறப்போராட்டம் தான் செய்தோம். கோரிக்கைகளை முழுமையாக விளக்குவதற்குள் கைது செய்து விட்டனர், என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை செயலாளர் இசக்கி கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு, மாறுதலுக்கு முட்டுக்கட்டை போடும் 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இதனால் வெளிமாவட்டங்களுக்கு பணி மாறுதலாகி செல்ல முடியாமல் பல பெண் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட ஆண்டுகள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதாக கூறிய வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்.
அதே போல் எங்களின் மற்றொரு நீண்ட கால கோரிக்கையான இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதையும் நிறைவேற்ற வேண்டும்.
எல்லா ஆசிரியர்களுக்கும் இது சரி செய்யப்பட்டு விட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் சரி செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
முறையான அறப்போராட்டம் செய்ய தான் சென்னை டி.பி.ஐ., வளாகத்திற்கு வந்தோம். கோரிக்கைகளை முழுமையாக விளக்குவதற்குள் கைது செய்து விட்டனர். இது கண்டனத்துக்குரியது, என்றார்.
கைது செய்வது தீர்வாகாது
சரவண செல்வன், மாவட்ட தலைவர், தேசிய ஆசிரியர் சங்கம்: பழைய பென்ஷன், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, இ.எல் சரண்டர் போன்றவை தேர்தலில் இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் தான். இது தவிர பணிநிரவல்போன்ற குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற சென்னையில் போராடிய ஆசிரியர்களை கைது செய்துள்ளதும் வீட்டு காவலில் வைத்திருப்பதும் வருத்தம் அடைய செய்கிறது.
ஏற்கனவே பதிவுபெற்ற சங்கங்களை அழைப்பு பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது. தீர்வு காண அடுத்த கட்ட பேச்சு வார்த்தையும் ஏற்பாடு செய்வதை விடுத்து இது போன்ற கைது நடவடிக்கை தீர்வாகாது.

