/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி வரும் காலங்களில் அதிகமாக இருக்கும்
/
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி வரும் காலங்களில் அதிகமாக இருக்கும்
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி வரும் காலங்களில் அதிகமாக இருக்கும்
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி வரும் காலங்களில் அதிகமாக இருக்கும்
ADDED : மார் 09, 2025 03:37 AM

சிவகாசி : இந்தியா அதிக இளைஞர்களை கொண்டுள்ள நாடாக இருப்பதால் இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருக்கும்,என சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் திருப்பதி ஐ.ஐ.டி., இயக்குனர் சத்யநாராயணா தெரிவித்தார்.
சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியின் 22 வது பட்டமளிப்பு விழா, பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரியின் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். டீன் மாரிசாமி வாழ்த்தினார்.
திருப்பதி ஐ.ஐ.டி., இயக்குனர் சத்யநாராயணா மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது, நாம் தேர்ந்தெடுக்கும் துறையில் முன்னேற வேண்டும் எனில் தொடர்ச்சியான கற்றலும் வலுவான அடித்தளமும் பெற்று இருந்தால் மட்டுமே வரும் காலங்களில் நம்முடைய பணியை திறம்பட செய்ய முடியும். இந்தியா அதிக இளைஞர்களை கொண்டுள்ள நாடாக இருப்பதால் இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருக்கும். வளர்ந்து வரும் துறைகளில் ஸ்டார்ட் அப் களை தொடங்கி இளைஞர்கள் சாதித்து வருகின்றனர். மேலும் இந்தத் துறையில் நிலைத்து இருக்க டீப் டெக் அவசியம்.
டீப் டெக் என்பது உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் அறிவியல் மற்றும் பொறியியலின் கலவை. இவ்வாறு அவர் பேசினார். ஒவ்வொரு துறையிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டாளர் ராஜேஸ்வரி, பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் செய்தனர்.