ADDED : ஜூன் 06, 2024 07:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரம் இந்திரா நகரை சேர்ந்த பாலமுருகன், 40, கூலித் தொழிலாளி. இவரின் மனைவி சுதா, 39. இத்தம்பதியின் மகன் மகேஷ் பாண்டி, 11, ஐந்தாம் வகுப்பு மாணவன். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, கீழூர் தெருவில் சடாச்சரம் என்பவரது வீட்டில் மகேஷ் பாண்டி துாக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு துாக்கி வந்தனர். மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். சிறுவன் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தான் தெரிய வரும் என, போலீசார் கூறினர்.