/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துப்பட்டா கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி
/
துப்பட்டா கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி
ADDED : மே 08, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சிவகாமிபுரத்தை சேர்ந்த காமேஷ் அருண்குமார் 12, வீட்டில் விளையாடிய போது கழுத்தில் துப்பட்டா இறுக்கியதில் பலியானார்.
சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் அச்சகத் தொழிலாளி செல்வ குமார பாண்டி . இவருக்கு காமேஷ் அருண்குமார் , இவருடன் இரட்டையராகப் பிறந்த மற்றொரு சிறுவன், எட்டு வயது மகள் இருந்தனர்.
விடுமுறை என்பதால் காமேஷ் அருண்குமார் தனது சகோதரர், சகோதரியுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். காமேஷ் அருண்குமார் கழுத்தில் துப்பட்டாவை கட்டி விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் இறுக்கியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

