/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதி வளைவில் பள்ளம்
/
பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதி வளைவில் பள்ளம்
ADDED : ஆக 26, 2024 05:39 AM

ராஜபாளையம்:
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதி வளைவில் ஏற்பட்டுள்ள பள்ளம் பின்னால் வரும் வாகனங்கள் விபத்திற்கு வித்திடுவதோடு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி வருவதை சரி செய்ய வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் உள்ளது. தினமும் 1000க்கும் அதிகமான பஸ்கள் வந்து செல்லும் இப்பகுதியில் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்டுக்கும், மெயின் ரோட்டில் இருந்து இணைப்பு பகுதி 30 அடி அகலத்தில் பள்ளமாக உள்ளது.
வாகனங்கள் திரும்பும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக உருவாகியுள்ள இப்பள்ளத்தை தவிர்க்க உள் நுழையும் வாகனங்கள் வளைந்து சுற்றித் திரும்புவதால் எதிர் வரும் வாகனங்களும் தடுமாற்றத்திற்கு உள்ளாகிறது. இது தவிர பஸ்களில் பயணிக்கும் முதியோர், குழந்தைகள் வேகமாக இறங்கி ஏறும் போது உடல் பாதிப்பை சந்திக்கின்றனர். இவற்றை சரி செய்யும் விதமாக போக்குவரத்து அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் சமப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

