/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வடிகாலை சரி செய்து விட்டு ரோடு அமைக்க எதிர்பார்ப்பு
/
வடிகாலை சரி செய்து விட்டு ரோடு அமைக்க எதிர்பார்ப்பு
வடிகாலை சரி செய்து விட்டு ரோடு அமைக்க எதிர்பார்ப்பு
வடிகாலை சரி செய்து விட்டு ரோடு அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 02, 2024 06:48 AM

விருதுநகர் : விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் புளுகனுாரணி ரோட்டை புதுப்பிக்க பழைய ரோடு தோண்டி கொத்தி போடப்பட்டுள்ளது. அதே நேரம் வடிகால் தடுப்புச்சுவர்கள் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளன. அவற்றை போட்ட பின்பே ரோடு போட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பழைய பஸ் ஸ்டாண்டில் ரோடு சேதமாகி மோசமான நிலையில் இருந்தது. இதனால் அவ்வழியே பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பஸ்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தன. மக்கள் நடமாட முடியாது தவித்தனர். இந்நிலையில் நேற்று ரோடு போடும் பணிக்காக பழைய போடு கொத்தி போடப்பட்டது. சில பகுதிகளில் பெயர்த்து எடுக்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் ரோடு போடபட்பட உள்ள நிலையில் இதன் வடிகால்கள் சிதிலமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளன. வழக்கமாக மழைக்காலங்களில் பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் தான் அதிகம் மழைநீர் தேங்குகிறது. வடிகால்கள் எதுவும் முறையாக பராமரிக்கப்படாததால் தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி தான் வடியும். இதிலே தான் ரோடு மேலும் மேலும் சேதமாகி பள்ளமாக இருந்தன.
இந்நிலையில் இந்த பள்ளங்களை சரி செய்ய தான் ரோட்டை கொத்தி பரவலாக்கி சமதளம் செய்துள்ளனர். இந்த சமதளமாக்கும் முயற்சியின் போது வடிகால்களின் சேதமடைந்த சுவர்களும் சரிந்துள்ளன. இதை சரி செய்யாமல், வடிகாலை ஆழப்படுத்தாமல் ரோடு போட்டால் வரும் மழைக்காலத்தில் நன்றாக மழை பெய்யும் போது வடிகாலில் மழைநீர் செல்லாமல் ரோட்டிலே தேங்கி சேதமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ரோட்டை சரி செய்து விட்டு புதிய ரோடு போட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.