/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தங்களது ஓட்டு ஏற்கனவே பதிவானதால் குடும்பமே அதிர்ச்சி
/
தங்களது ஓட்டு ஏற்கனவே பதிவானதால் குடும்பமே அதிர்ச்சி
தங்களது ஓட்டு ஏற்கனவே பதிவானதால் குடும்பமே அதிர்ச்சி
தங்களது ஓட்டு ஏற்கனவே பதிவானதால் குடும்பமே அதிர்ச்சி
ADDED : ஏப் 20, 2024 04:43 AM
சிவகாசி: சிவகாசியில் ஓட்டு போட வந்த நபரின் மனைவி, மகளின் ஓட்டுக்கள் ஏற்கனவே பதிவானதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து எனது குடும்பத்தின் ஓட்டையே ஆட்டைய போட்டனர் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வெளியிட்டுள்ளார்.
சிவகாசியை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் தனது மனைவி, மகளுடன் சிவகாசி எஸ்.எச்.என்., பள்ளியிலுள்ள ஓட்டு சாவடிக்கு ஓட்டுப் பதிவு செய்ய வந்தார்.
ஓட்டு பதிவு செய்வதற்காக உள்ளே சென்று பெயர் சரிபார்க்கையில் மூன்று பேரின் ஓட்டும் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பதிவு செய்ததற்காக கையெழுத்தும் போடப்பட்டிருந்தது. இதனால் மூன்று பேரும் அதிர்ச்சி அடைந்து ஓட்டுச் சாவடியை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து முத்துசாமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.