/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொள்முதலுக்கு விளைபொருள் வழங்கியும் பணம் வராததால் பாதிப்பு தவிப்பில் விவசாயி
/
கொள்முதலுக்கு விளைபொருள் வழங்கியும் பணம் வராததால் பாதிப்பு தவிப்பில் விவசாயி
கொள்முதலுக்கு விளைபொருள் வழங்கியும் பணம் வராததால் பாதிப்பு தவிப்பில் விவசாயி
கொள்முதலுக்கு விளைபொருள் வழங்கியும் பணம் வராததால் பாதிப்பு தவிப்பில் விவசாயி
ADDED : ஜூலை 04, 2024 12:51 AM
விருதுநகர்: விருதுநகரில் ஒழுங்குமுறை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மக்காச்சோளத்திற்கு ஒரு மாதம் ஆகியும் பணம் வழங்காததால் விவசாயி விரக்தியடைந்துள்ளார்.
விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரத்தை சேர்ந்த மக்காசோள விவசாயி வாசுதேவன். தான் விளைவித்த மக்காச்சோளத்தை விருதுநகரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மே16ல் 30 லட்சத்து 55 ஆயிரத்திற்கு மக்காசோளத்தை விற்பனை செய்தார்.
இது கொள்முதல் செய்யப்பட்ட நிலையில்ரூ.7.27 லட்சம் மட்டுமேவழங்கப்பட்டுள்ளது. மீதத்தொகை ரூ.23 லட்சத்து 27 ஆயிரத்து 250 லட்சம் ஒரு மாதத்திற்கு மேலாகியும் தற்போது வரை வழங்கப்படவில்லை. கொள்முதல் செய்தோரிடம் பணத்தை வாங்கி தர விற்பனை கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை.
இது தொடர்பாக விவசாயி வாசுதேவன் வேளாண் அதிகாரிகளிடம் புகார் செய்தார். ஆனால் தீர்வில்லை. ஒழுங்குமுறை கூட அதிகாரிகள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தும் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆமைவேகத்தில் நடந்து வருகிறது.
இது போன்ற சூழலை தவிர்க்க பணம் தரக்கூடியவர்களாகவும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதோரை கொண்டு கொள்முதல் செய்ய விற்பனை கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வாங்கி பலர் விவசாயம் செய்கின்றனர். பணம் வராமல் போனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.
ராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் வேல்சாமி கூறியதாவது: கொள்முதலுக்கு வாங்கிய சம்மந்தப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இன்று தருவதாக உறுதி அளித்துள்ளனர். வந்ததும் உடனடியாக விவசாயிக்கு வழங்கப்பட்டு விடும், என்றார்.