ADDED : ஏப் 28, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: விருதுநகர்மாவட்டம் சிவகாசியில் சட்ட விரோதமாக கோடவுனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் கதிரேஷ் 45. இவர் மீனாட்சி காலனியில் உள்ள தனக்கு சொந்தமான கோடவுனில் சட்டவிரோதமாக பட்டாசு திரிகள் பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான திரிகளை பறிமுதல் செய்தனர்.

