/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் 12 அடிக்கு குறைந்த நீர் மட்டம் குடிநீருக்கு மழையை எதிர்பார்க்கும் நகராட்சி

ADDED : மே 09, 2024 05:04 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் நகருக்கு சப்ளை செய்யும் ஆறாவது மைல் குடிநீர் தேக்கம் கோடையின் தாக்கத்தால் 12 அடியாக நீர்மட்டம் குறைந்துள்ளது. தொடர் சப்ளைக்கு கோடை மழையை எதிர்பார்த்து உள்ளனர்.
மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ராஜபாளையம் நகர் பகுதி மக்களுக்கு ஆறாவது மைல் எனும் நகராட்சி குடிநீர் தேக்கம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. லேசான மழை பெய்தாலும் ஆற்றில் வரும் நீரை தேக்கத்திற்கு திருப்பி தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
மொத்தம் 24 அடி உயரம் உள்ள நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி தற்போது 18 அடி உயரம் வரையே தேக்கி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பெரிய அளவில் மழை பெய்யாததால் நீர் மட்டம் 12 அடியாக குறைந்து விட்டது. ஏற்கனவே வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை நடைபெறுவதுடன், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட சப்ளையை வைத்து சமாளித்து வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில், தாமிரபரணி குடிநீர் சப்ளை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது 12 அடி இருப்பு உள்ளது. மலையில் ஒரு முறை பெரிய மழை பெய்தாலும் சப்ளைக்கான தண்ணீர் வரத்து தேவையான அளவு கிடைத்து விடும். மீதி தேவைக்கு கூட்டுக் குடிநீரை வைத்து சமாளிக்க முடியும். இருப்பினும் கோடை மழையை எதிர்பார்த்து உள்ளோம்.