/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் நிர்வாகத்திடம் சக்கரைகுளத்தை ஒப்படைத்தது நகராட்சி

ADDED : பிப் 25, 2025 07:25 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சக்கரைகுளத்தை சீரமைத்த நிலையில், அதனை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் நகராட்சி நிர்வாகம் ஒப்படைத்தது.
ஸ்ரீவி.,யில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம், திருப்பாற்கடல், சக்கரைகுளம் ஆகிய குளங்கள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கழிவுகள் தேங்கி கிடந்தது. இதனை சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரி வந்தனர். இந்நிலையில் ரூ.1 கோடியில் திருப்பாற்கடலையும், அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 45 லட்சம் செலவில் சக்கரைகுளத்தையும் நகராட்சி நிர்வாகம் சீரமைத்தது. ஆனால், சக்கரை குளத்தில் கழிவுகள் தேங்கி அசுத்தமான நிலை காணப்பட்டது.
பிப். 17ல் மத்திய அமைச்சர் ஹரிஷ் மல்கோத்ரா ஸ்ரீவி.,க்கு ஆய்வு செய்ய வந்தபோது, பா.ஜ.,மாவட்டத் தலைவர் ராஜா, மற்றும் நிர்வாகிகள் அவரை சக்கரைகுளத்திற்கு அழைத்துச் சென்று நகராட்சி மீது புகார் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் உடனடியாக சக்கரைகுளத்தை சுத்தம் செய்து நகராட்சி அதிகாரிகள் அதனை மீண்டும், பிப்.18ல் ஆண்டாள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் விரைவில் திருப்பாற்கடலையும் ஆண்டாள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நகராட்சி முடிவு செய்துள்ளது.