/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
3 மாதமாக குடிநீர் வரலை தவிப்பில் கான்சாபுரம் மக்கள்
/
3 மாதமாக குடிநீர் வரலை தவிப்பில் கான்சாபுரம் மக்கள்
3 மாதமாக குடிநீர் வரலை தவிப்பில் கான்சாபுரம் மக்கள்
3 மாதமாக குடிநீர் வரலை தவிப்பில் கான்சாபுரம் மக்கள்
ADDED : செப் 06, 2024 04:45 AM

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் பள்ளிவாசல் ரேசன் கடை தெரு பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கான்சாபுரத்திலிருந்து அத்தி கோயில் செல்லும் பகுதியில் பள்ளிவாசல் ரேஷன் கடை தெருவில் ரோடு, வாறுகால் அமைக்கும் வேலைகள் நடந்தது. தற்போது வேலைகள் முடிந்து மூன்று மாதங்களை நெருங்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் சப்ளை இல்லை. இப்பகுதியில் போர்வெல் தண்ணீர் தொட்டியும் இல்லாததால் பெண்கள் நீண்ட தூரம் வயல் பகுதிக்கு நடந்து சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் தார் ரோட்டிற்கும், புதிதாக கட்டப்பட்ட வாறுகாலுக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று காலை குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் வீணாக சென்றது.
தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டுமென கான்சாபுரம் ஊராட்சி, வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தங்கள் வீடுகளுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.