ADDED : ஏப் 28, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி,  :   நரிக்குடி என். முக்குளத்தை சேர்ந்த தவமணி மனைவி விஜயலட்சுமி 39. காய்கறி வாங்க வாரச் சந்தைக்குச் சென்றவர் கையில் வைத்திருந்த மணி பர்ஸை தவறவிட்டார். அதில் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி, ரூ.ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது.
நரிக்குடி போலீசார் சைபர் கிரைம் போலீசார்  உதவியுடன் அலைபேசி சிக்னலை கண்காணித்து, அப்பகுதியில் கிடந்த பர்ஸை கண்டறிந்து, விஜயலட்சுமியிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசாரை இன்ஸ்பெக்டர் சிவபாலன் பாராட்டினார்.

