/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் பணி ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்க உத்தேசம்
/
சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் பணி ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்க உத்தேசம்
சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் பணி ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்க உத்தேசம்
சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் பணி ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்க உத்தேசம்
ADDED : ஆக 18, 2024 05:06 AM

சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணி நேற்று துவங்கியது.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் ரூ.61.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ஜூலையில் பூமி பூஜை போடப்பட்டது. மேம்பால பணிக்காக தேர்வு செய்யப்பட்ட மாற்றுப்பாதையில் ஏற்கனவே இரு நாட்கள் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது மாற்றுப்பாதை சேதமடைந்து இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனைத் தொடர்ந்து மாற்றுப்பாதையை ஆய்வு செய்த சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் ரோட்டினை சீரமைக்க அறிவுறுத்தினார். ஆக. 12 ல் வாகன ஓட்டிகளுக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் மேம்பால பணிக்கு பில்லர் அமைக்க ரோட்டில் பள்ளம் தோண்டி, பேரிகார்டு வைக்கப்பட்டது.
இதனால் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல வேண்டிய கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், நீதிமன்றம், இ.எஸ்.ஐ மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லுாரிகளுக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தொடர்ந்து சப் கலெக்டர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்(சிறப்பு திட்டம்) ஜெகன் செல்வராஜ் உடன் ஆலோசனை நடத்தி, மேம்பால பணி நடக்கும் போது பாதுகாப்பான முறையில் டூவீலர்கள் ரயில்வே கிராசிங் வழியாக செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்த பின்னரே பணிகள் துவங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தோண்டிய பள்ளம் உடனடியாக மூடப்பட்டது. இந்நிலையில் மாற்றும் பாதை சீரமைத்த நிலையில் நேற்று பில்லர் அமைப்பதற்காக ரோட்டில் பள்ளம் தோண்டும் பணி துவங்கியது. பணியினை சப் கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பார்வையிட்டனர்.
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கூறுகையில், நேற்று துவங்கிய பணி தொடர்ந்து நடைபெறும். அதுவரையிலும் ரயில்வே கேட் மூடப்பட்டு டூவீலர்கள் மட்டும் சென்று வரலாம். ஒன்றரை ஆண்டுக்குள் பாலம் கட்டும் பணி முடியும் என்றார்.