/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் ரேஷன் கடை கட்டடம் அச்சத்தில் ஊழியர், நுகர்வோர்
/
இடியும் நிலையில் ரேஷன் கடை கட்டடம் அச்சத்தில் ஊழியர், நுகர்வோர்
இடியும் நிலையில் ரேஷன் கடை கட்டடம் அச்சத்தில் ஊழியர், நுகர்வோர்
இடியும் நிலையில் ரேஷன் கடை கட்டடம் அச்சத்தில் ஊழியர், நுகர்வோர்
ADDED : செப் 14, 2024 01:57 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சி முத்துராமலிங்க நகரில் ரேஷன் கடை கட்டடத்தின்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கூரைக்குண்டு ஊராட்சியின் முத்துராமலிங்க நகரில் எம்.எல்.ஏ., நிதியில் 2015ல் ரூ.6 லட்சத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் கட்டடத்தை முறையாக பராமரிக்காததால் சுவர்களில் விரிசல் விழுந்துள்ளது.
மேலும் முன்பக்க கூரையின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. சிமென்ட் பூச்சுகள் கடைக்கு வரும் நுகர்வோர் மீது விழுவதால் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். தரை தளம் ஆங்காங்கே பெயர்ந்து பள்ளங்களாக மாறியுள்ளது.
கட்டடம் கட்டி 9 ஆண்டுகளாகிய நிலையில் பராமரிப்பு செய்யப்படாததால் சேதங்கள் அதிகரித்து வருகிறது. ரேஷன் கடைக்கு தேவையான பொருட்களை லாரியில் இருந்து இறக்கும் தொழிலாளர்கள் தளங்களின் சேதத்தால் தடுமாறி விழுகின்றனர். 15 ஆண்டுகள் கூட நீடிக்காத நிலையில் கட்டடம் தற்போது வலுவிழந்துள்ளது.
எனவே கூரைக் குண்டு முத்துராமலிங்க நகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நுகர்வோர்கள் எதிர்பார்க்கின்றனர்.