/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பு அகற்றும் அறிவிப்பு வெளியிட்டதோடு முடிந்தது பணி
/
ஆக்கிரமிப்பு அகற்றும் அறிவிப்பு வெளியிட்டதோடு முடிந்தது பணி
ஆக்கிரமிப்பு அகற்றும் அறிவிப்பு வெளியிட்டதோடு முடிந்தது பணி
ஆக்கிரமிப்பு அகற்றும் அறிவிப்பு வெளியிட்டதோடு முடிந்தது பணி
ADDED : ஜூன் 22, 2024 04:44 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்ற ஜூன் 20ல் கெடு விதித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளனர். இதனால் அறிவிப்பு வெளியிட்டதோடு பணி முடிந்தது என நினைக்கும் அதிகாரிகளால் ஆக்கிரமிப்பாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
காரியாபட்டியில் முக்கு ரோட்டில் இருந்து பஜார், செவல்பட்டி, பைபாஸ் ரோடு வரை ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை.
மகளிர் மேல்நிலைப்பள்ளி முன் ரோட்டில் சாலையோர காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள், கடை வைத்திருப்பவர்கள் ரோடு வரை ஆக்கிரமித்து ஷெட் அமைத்துள்ளனர். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்களை ரோட்டில் நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். முக்கு ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் படாதபாடு படுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, தற்போது வாறுகால் கட்டும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரோடு விசாலமாக உள்ளது. மறுபடியும் ஆக்கிரமிக்க வாய்ப்பு உள்ளது. மறுபடியும் ஆக்கிரமிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து முக்குரோட்டில் இருந்து பஜார், செவல்பட்டி, பைபாஸ் வரை ரோட்டோரம் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் ஜூன் 18க்குள் அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் கெடு விதித்தனர்.
இல்லாவிட்டால் ஜூன் 20ல் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் சிலர் ரோட்டோரம் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளனர். இதனால் அதிகாரிகள் இனி ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு வாய்ப்பில்லை என உற்சாகத்தில் உள்ளனர்.
என நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி மக்கள் எளிதில் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென விரும்புகின்றனர்.