/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலையில் இல்லை பயணியர் நிழற்குடை வெயிலில் தவிக்கும் மக்கள்
/
நான்கு வழிச்சாலையில் இல்லை பயணியர் நிழற்குடை வெயிலில் தவிக்கும் மக்கள்
நான்கு வழிச்சாலையில் இல்லை பயணியர் நிழற்குடை வெயிலில் தவிக்கும் மக்கள்
நான்கு வழிச்சாலையில் இல்லை பயணியர் நிழற்குடை வெயிலில் தவிக்கும் மக்கள்
ADDED : மே 03, 2024 05:01 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: அழகாபுரியிலிருந்து கிருஷ்ணன் கோவில் வரை நான்கு வழிச்சாலையில் பயணியர் நிழற்குடை இல்லாததால் வடுகப்பட்டி, அம்மாபட்டி, நத்தம்பட்டி, லட்சுமியாபுரம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கொளுத்தும் வெயிலில் நிற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர். தற்காலிக நிழற்குடைகள் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரோடுகள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் கட்டும் பணி துவங்கியுள்ளது. கொளுத்தும் வெயிலிலும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் அழகாபுரியில் இருந்து கிருஷ்ணன் கோவில் வரை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வடுகப்பட்டி, அம்மாபட்டி, நத்தம்பட்டி, லட்சுமியாபுரம் கிராமங்களில் இருந்த நிழற்குடைகள் இடிக்கப்பட்டதால் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தற்போது எந்த வித நிழலும் இல்லாமல், கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் தார் ரோட்டில் பஸ்சிற்காக காத்திருந்து பயணிக்கின்றனர்.
இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, தற்காலிக நிழற்குடைகள் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.