/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனை குப்பையை விலை கொடுத்து வெளியேற்றும் நிலை நகராட்சி நடவடிக்கை தேவை

ADDED : ஆக 16, 2024 03:46 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேரும் குப்பையை லோடு ரூ. 800 கொடுத்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுஉள்ளது. குப்பையை கொட்ட அனுமதித்த நகராட்சி நிர்வாகம், வாகனங்களில் சேகரித்து செல்லாமல் இருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை துவங்கிய பின்பு தற்போது வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் குப்பையும் அதிகரித்துள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பையில் உள்ள மருத்துவக்கழிவுகளை முறையாக அகற்றி அழிக்கின்றனர்.
இதில் மற்றவற்றை நகராட்சி குப்பை கொட்டும் இடத்தில் கொட்டுகின்றனர். பிற மாவட்டங்களில் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பையை மாநகராட்சி வாகனம் மூலம் கொண்டுச் செல்கின்றனர். ஆனால் விருதுநகர் நகராட்சி நிர்வாகம்மருத்துவமனை குப்பையை சேகரிப்பதில்லை. இதனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் தினமும் 4 முதல் 5 லோடு குப்பையை தனியார் வாகனத்திற்கு வாடகையாக லோடுக்கு ரூ.800 கொடுத்து கொண்டுச் சென்று கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலை மருத்துவக்கல்லுாரி துவங்கிய நாள் முதல் நீடிக்கின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பையை நகராட்சியின் வாகனங்கள் மூலம் கொண்டுச் சென்று கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.