/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொட்டி கட்டி, குழாய்கள் பதித்து 9 ஆண்டுகளாகியும் குடிநீர் இல்லை
/
தொட்டி கட்டி, குழாய்கள் பதித்து 9 ஆண்டுகளாகியும் குடிநீர் இல்லை
தொட்டி கட்டி, குழாய்கள் பதித்து 9 ஆண்டுகளாகியும் குடிநீர் இல்லை
தொட்டி கட்டி, குழாய்கள் பதித்து 9 ஆண்டுகளாகியும் குடிநீர் இல்லை
ADDED : மே 19, 2024 04:59 AM

சிவகாசி ; சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி கவிதா நகரில் 9 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராததால் குடிநீர் இல்லாமல் குடியிருப்புவாசிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி கவிதா நகரில் 2015 ல் ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியினருக்கு குடிநீர் குழாய் இணைப்பும் கொடுக்கப்பட்டது. இப்பணிகள் முடிந்து 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமலேயே சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. குடிநீர் குழாய்களும் பயனற்று உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் குடிக்கவும், புழக்கத்திற்கும் தண்ணீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.