/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் இல்லை
/
சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் இல்லை
சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் இல்லை
சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் இல்லை
ADDED : செப் 03, 2024 04:51 AM
சிவகாசி, : சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் ஒரு ஆண்டாக குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி சின்னத்தம்பி நகரில் ஒரு ஆண்டிற்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் இப்பகுதியினர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முருகேசன், மெக்கானிக்; சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. கூலி வேலை பார்க்கும் இப்பகுதி மக்களால் தண்ணீரை தினமும் விலை கொடுத்து வாங்குவதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.