/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொங்கலாபுரத்தில் இதுவரை குடிநீரே இல்லை குழாயில் கசியும் நீரை சேகரிக்கும் அவலம்
/
கொங்கலாபுரத்தில் இதுவரை குடிநீரே இல்லை குழாயில் கசியும் நீரை சேகரிக்கும் அவலம்
கொங்கலாபுரத்தில் இதுவரை குடிநீரே இல்லை குழாயில் கசியும் நீரை சேகரிக்கும் அவலம்
கொங்கலாபுரத்தில் இதுவரை குடிநீரே இல்லை குழாயில் கசியும் நீரை சேகரிக்கும் அவலம்
ADDED : ஜூன் 19, 2024 05:11 AM

சிவகாசி : சிவகாசி அருகே மானகசேரி ஊராட்சி கொங்கலாபுரத்தில் இது வரை குடிநீர் வினியோகம் இல்லாததால் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய் வால்வில் கசிந்து வெளியேறும் தண்ணீரை குடிப்பதற்காக சேகரிக்கின்றனர்.
சிவகாசி அருகே மானகசேரி ஊராட்சி கொங்கலாபுரத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் வீடுகளுக்கு புழக்கத்திற்கான தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
ஆனால் இங்கு இதுவரையிலும் குடிநீர் வினியோகம் இல்லை. சங்கரன்கோவிலில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக சிவகாசிக்கு மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் கொங்கலாபுரம் பஸ் ஸ்டாப் அருகே இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயின் வால்வு அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் செய்யும்போது இதில் குடிநீர் கசிந்து வெளியேறும்.
இதனை கொங்கலாபுரம் பகுதி மக்கள் சேகரித்து பிடிக்கின்றனர். தவிர குடிநீருக்கு வழியில்லாததால் பெரும்பான்மையான மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடம் ரூ. 15, சாதாரண தண்ணீரை குடம் ரூ. 7 என விலைக்கு வாங்குகின்றனர். இவர்கள் தவிர அருகில் உள்ள பேர்நாயக்கன்பட்டி, பகுதி மக்களும் இங்கு குழாயில் கசியும் நீரை குடிப்பதற்காக சேகரித்து செல்கின்றனர்.
சுப்பையா பட்டாசு தொழிலாளி: கொங்கலாபுரம், எங்கள் பகுதிக்கு இதுவரையிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பெரும்பாலும் குடிநீரை விலைக்கு வாங்கி தான் பயன்படுத்துகின்றோம். தினமும் விலைக்கு வாங்குவது சிரமம் ஏற்படுகிறது.
இதனால் ரோட்டின் அருகே குழாயிலிருந்து வெளியேறும் குடிநீரை குடிப்பதற்காக சேகரிக்கின்றோம். இதற்கு முன்னர் 7 கி.மீ., தொலைவில் உள்ள இ.டி., ரெட்டியபட்டிக்கு சென்று குடிநீர் சேகரித்து வந்தோம். எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், என்றார்.