/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலி நகை அடமான மோசடி மேலாளர் உட்பட மூவர் கைது
/
போலி நகை அடமான மோசடி மேலாளர் உட்பட மூவர் கைது
ADDED : ஆக 30, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உழவர் சந்தை அருகே உள்ள 'ஸ்ரீராம் பைனான்ஸ்' நகை கடன் நிறுவனத்தில், சாத்துார், கோபாலபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி, 24, நகை கடன் மேலாளராகவும், மண்ணுக்குமீண்டான்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், 26, நகை மதிப்பீட்டாளராகவும் பணிபுரிந்தனர்.
தாயில்பட்டி கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த பாண்டி, 36, போலியாக, 324 கிராமிற்கு வளையல்களை தயார் செய்து, முத்துசாமி, ரமேஷ் உதவியுடன் அங்கு அடமானம் வைத்து, பணம் பெற்றார்.
இதை கண்டறிந்த அந்த பைனான்ஸ் நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளர் முத்துபாண்டியன் அளித்த புகாரின்படி, சிவகாசி டவுன் போலீசார் மூவரையும் நேற்று கைது செய்தனர்.