/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோடை வெப்பக்காற்றில் இருந்து தப்பிக்க வழிமுறைகள்
/
கோடை வெப்பக்காற்றில் இருந்து தப்பிக்க வழிமுறைகள்
ADDED : மார் 22, 2024 04:16 AM
விருதுநகர்: கோடைவெப்பக்காற்று தாக்கத்தால் மக்கள் பாதிப்படையாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் அறிவுரை கூறினார்.
அவரது செய்திக்குறிப்பு: தாகமின்றி இருந்தாலும் தேவையான அளவு குடிநீர் பருக வேண்டும்.லேசான இளம் வண்ண தளர்வான காட்டன் ஆடைகளைஅணிய வேண்டும். வெளியில் செல்லும் போது பாதுகாப்பிற்கான கண்ணாடி, குடை, தொப்பி, காலணிகள் அணிய வேண்டும்.
உடலில் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க உப்பு சர்க்கரை கரைசல், வீட்டில் தயாரிக்கும் நீராகாரங்களான லஸ்ஸி, கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு, மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். வெப்பக்காற்று தாக்குதல் அறிகுறிகளானவெப்பக் கொப்பளங்கள் தோன்றுதல், உஷ்ண பாதிப்புகளான உடல் தளர்ச்சி, தலைசுற்றல், தலைவலி, குமட்டல், வியர்த்தல், வலிப்பு ஆகியவை ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவரை அணுகவும்.
பணிபுரியும் இடங்களில் குளிர்ந்த குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சூரியஒளி நேரடியாக படுமாறு தொழிலாளர்களைபணிபுரிவதை தடுக்க வேண்டும். பகலில் குளிரான நேரங்களில் கடினமான உடலுழைப்பை செய்ய வேண்டும்.
வெப்பக் காற்று காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க கூடாதவை
நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையும், செல்ல பிராணிகளையும் விட்டு செல்லக் கூடாது. மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை சூரியஒளி உடலில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சமையலறை கதவு, ஜன்னல்கள் திறந்த நிலையில் காற்றோட்டமாக இருக்க செய்வதுடன், அதிக உஷ்ணமான நேரங்களில் சமையல் செய்வதும் தவிர்க்க வேண்டும்.
மதுபானங்கள், டீ, காபி, காற்றடைக்கப்பட்ட பானங்கள் ஆகியவை உடலில் நீர் இழப்பு ஏற்பட செய்யக் கூடியவை. எனவே அருந்துவதை தவிர்க்கவும். அதிக புரதமுள்ள உணவு, பழையக் கெட்டுப்போன உணவுகளை உண்பதை தவிர்க்கவும்.
மேலும்இது தொடர்பான விவரங்கள் மாவட்ட அவசர செயல்பாட்டு மையம், தொலைபேசி எண்-1077 (04562-252017)ல் தொடர்பு கொள்ளவும். கோடை கால வெயில் தாக்கத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கும், குடிநீர் வாரியத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என கேட்டுக் கொண்டார்.

