/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கடலையில் பூச்சி தாக்குதலை தடுக்க அறிவுரை
/
கடலையில் பூச்சி தாக்குதலை தடுக்க அறிவுரை
ADDED : மே 27, 2024 12:44 AM
காரியாபட்டி:
காரியாபட்டி எஸ்.மறைக்குளம், பனைக்குடி பகுதியில் கடலை செடியில் நோய் தாக்குதல் குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
செய்தி எதிரொலியாக காரியாபட்டி வேளாண் விரிவாக்க மையம் சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து பகுதிகளிலும் நிலக்கடலையில் வேர் அழுகல் நோயினால் மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நோய் மேக்ரோபோமினா, பேசிமோலினா என்ற பூஞ்சை கிருமி தாக்குதலால் ஏற்படுகிறது.
மண், செடி சருகுகளில் இப்பூஞ்சானின் வித்து வெகு நாட்களுக்கு உறக்க நிலையில் இருக்கும். செடியின் அடிப்புறத்தில் காய்ந்தும், மஞ்சள் நிறமாக மாறியும் காணப்படும். பாதிக்கப்பட்ட செடிகளின் அடிப்புறத்தில் திசுக்கள் உதிர்ந்து காணப்படும். பாதிக்கப்பட்ட செடியில் நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய விதைகள் உண்டாகின்றன.
மண்ணின் மேல் உள்ள பயிர் கழிவுகளை ஆழமாக உழ வேண்டும். விதையை டிரைகோடெர்மா விரிடி 1 கிலோ விதைக்கு 4 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்யலாம். 2.5 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம். 1 லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் கார்பண்டாசிம் கலந்து கரைசலை பாதிக்கப்பட்ட வேர் பகுதியில் மண்ணில் நனையும்படி ஊற்றி வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

