/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருமங்கலம் - -ராஜபாளையம் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் துவக்கம்
/
திருமங்கலம் - -ராஜபாளையம் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் துவக்கம்
திருமங்கலம் - -ராஜபாளையம் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் துவக்கம்
திருமங்கலம் - -ராஜபாளையம் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 30, 2024 06:08 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன்புத்துார் வரை சேதமடைந்து காணப்படும் 36 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை ரூ.30 கோடியில் சீரமைக்கும் பணி நேற்று முதல் துவங்கியது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து கல்லுப்பட்டி, அழகாபுரி, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், தேவதானம் வழியாக தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்கள் சேதமடைந்து குண்டும், குழியுமாகி தினசரி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.
இந்த ரோட்டை விரைந்து சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழி சாலை பணிகள் நடப்பதால் சேதமடைந்த இந்த தேசிய நெடுஞ்சாலை கைவிடப்பட்ட ரோடாக அறிவிக்கப்பட்டிருந்தது
ஆனால், விபத்துக்கள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எடுத்த தொடர் நடவடிக்கையின் காரணமாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் இந்த ரோட்டினை சீரமைக்க சிறப்பு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து ரூ.30 கோடி மதிப்பில் மதுரை மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை இல்லாமல் சேதமடைந்து காணப்படும் 9 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையும், விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்து காணப்படும் 27 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையும் சீரமைக்கும் பணி நேற்று முதல் ராஜபாளையத்தில் இருந்துதுவங்கியது.
10 செ.மீ., உயரத்திற்கு இரு அடுக்கு தார் ரோடு போடப்பட உள்ளது. நான்கு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் வேல்ராஜ் தெரிவித்தார்.