/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தள்ளு மாடல் பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு
/
தள்ளு மாடல் பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : பிப் 28, 2025 07:17 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் பழுதடைந்து நின்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம் ஆவரம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நேற்று காலை 10:00 மணிக்கு சொக்கநாதன் புத்துார் செல்ல வேண்டிய பஸ் பஸ்ஸ்டாண்ட் நோக்கி வந்த போது பழுதாகி நின்றது.
தேசிய நெடுஞ்சாலையின் குறுகலான பகுதியில் பஸ் நின்றதுடன் வாகன போக்குவரத்து அதிகம் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரமாக பஸ்சை இயக்க முயற்சித்து முடியாததுடன் ஒரு பக்க வாகன போக்குவரத்து முடங்கியதால் அப்பகுதியில் சென்ற அரசு பஸ் ஊழியர்கள், பொதுமக்கள் பஸ்சை தள்ளிவிட்டு இயக்கினர்.
சிறிது தொலைவு சென்ற நிலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு மீண்டும் பழுதாகி நின்றதால் ஓரமாக நிறுத்தப்பட்டு பணிமனையிலிருந்து ஆட்கள் வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கிராமப் பகுதிக்கு செல்லும் பஸ்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் இது போன்ற நிலையில் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சேதமடைந்துள்ள பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.