/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாரணாபுரம் நான்கு விலக்கு ரோட்டில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
/
நாரணாபுரம் நான்கு விலக்கு ரோட்டில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
நாரணாபுரம் நான்கு விலக்கு ரோட்டில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
நாரணாபுரம் நான்கு விலக்கு ரோட்டில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
ADDED : பிப் 28, 2025 07:17 AM

சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் நான்கு ரோடு விலக்கில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது. டிராபிக் சிக்னல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி நாரணாபுரம் நான்கு ரோடு விலக்கில் பஸ் ஸ்டாண்ட் , நாரணாபுரம், பிச்சாண்டி தெரு விருதுநகர் ரோடு பிரிந்து செல்கிறது. நாரணாபுரம் ரோடு வழியாக கன்னி சேரி, விருதுநகருக்கு வாகன ஓட்டிகள் அதிகமாக செல்கின்றனர். மேலும் மெயின் ரோடு என்பதால் இப்பகுதியில் எப்பொழுதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள டிராபிக் சிக்னல்கள் செயல்படவில்லை. இதனால் காலை, மாலையில் பள்ளி கல்லுாரிமாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
தவிர பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள் ஒரே நேரத்தில் அதிகமாக வரும் போது விலகிச் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு முறையும் அதிகமான வாகனங்கள் வரும்போது போக்குவரத்து 10 நிமிடம் பாதிக்கப்படுகிறது. தவிர டூ வீலர்களில் செல்பவர்கள் விலகிச் செல்லும் போது விபத்தில் சிக்குகின்றனர். எனவே இப்பகுதியில் டிராபிக் சிக்னல்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.