நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
பொருளாளர் அன்புச்செல்வன் வரவேற்றார். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசினார்.
மாவட்ட தலைவர் நாகராஜ் ஆலோசனைகள் வழங்கினார். மறுநாள் அமர்வில் மாவட்ட துணை செயலாளர் சுப்புராஜ், அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன், மூன்றாம் அமர்வில் மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதேவி, மாநில தலைவர் வில்சன், சமூக ஆர்வலர் ஊர்க்காவலன் பேசினர்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நியமிக்க கோரியும், இலவச பஸ் பாஸ் புதுப்பிக்கும் போது முகாம் நடத்த கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.