ADDED : ஜூன் 21, 2026 07:31 PM
சிவகாசி, ஜூன் 22 -
சிவகாசி பசுமை மன்றம், எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி சார்பில் சிறுகுளம் கண்மாய்க் கரையின் பசுங்கரை வனம் என்ற பெயரில் மியாவாக்கி முறையில் குறுங்காடு அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கண்மாயின் கிழக்கு கரையில் 5200 மரக்கன்றுகள் வைக்கப்பட உள்ளன. ஆல மரம், அரச மரம், மந்தாரை போன்ற மரக்கன்றுகளும், பூச்செடிகளும் அடுக்குமுறையில் வைக்கப்படுகின்றன. அமைச்சர்கள் கீர்த்தனா, ஸ்ரீநாத் துவக்கி வைத்தனர். பசுமை மன்ற நிர்வாகி அபிரூபன் விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கினார். எஸ்.எப்.ஆர்., கல்லுாரி தலைவர் மகேஸ்வரன், முதல்வர் சுதா பெரிய தாய், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். பசுமை மன்றம் சார்பில் 5.30 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன என பசுமை நின்ற நிர்வாகி செல்வக்குமார் தெரிவித்தார்.
