UPDATED : ஜூன் 21, 2026 08:20 PM
ADDED : ஜூன் 21, 2026 07:51 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 6 மையங்களில் நடந்த நீட் மறு தேர்வில் 2329 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 968 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்டத்தில் நடந்த நீட் மறு தேர்விற்கு 3297 மாணவர்கள் எழுதுவதற்காக 6 மையங்கள் ஒதுக்கப்பட்டது. ஷத்திரிய வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் 600 பேர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் 600 பேர், க்ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 576 பேர், பி.எம்.,ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 489 பேர், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 576 பேர், எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளியில் 456 பேர் என மொத்தம் 3297 மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது.
இதில் 2329 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். 968 பேர் ஆப்சென்ட் ஆகினர். மே 3ல் நடந்த தேர்வில் 170 பேர் தான் ஆப்சென்ட் ஆகினர். மறு தேர்வில் ஆப்சென்ட் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
