/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பீஹார் தொழிலாளி கொலையில் சிறுவன் உட்பட இருவர் கைது
/
பீஹார் தொழிலாளி கொலையில் சிறுவன் உட்பட இருவர் கைது
பீஹார் தொழிலாளி கொலையில் சிறுவன் உட்பட இருவர் கைது
பீஹார் தொழிலாளி கொலையில் சிறுவன் உட்பட இருவர் கைது
ADDED : ஜூலை 03, 2024 02:25 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அனுப்பங்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கு சொந்தமான விமல் சிமென்ட் புரடாக்ட்ஸ் நிறுவனத்தில் பீஹார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த கான்கிரேஸ் புயான் 43 வேலை செய்தார்.
நேற்று முன்தினம் அவர் நாரணாபுரம் புதுாரில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரை கொலை செய்ததாக நாரணாபுரம் புதுாரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தமிழ்மணி 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அவருடன் கைதான சிறுவன், தமிழ்மணி ஆகியோர் தகராறு செய்தது தெரியவந்தது. இருவரையும் விசாரித்த போது, போதையில் ஏற்பட்ட தகராறில் அவரை குத்திக்கொலை செய்தது தெரியவந்தது என்றனர்.